கையும் களவுமாக கைதான யூடியூபர் பப்ஜி மதன்…  

0
பப்ஜி மதனை எதுக்கு வெளியில் விடணும் - விசாரணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி!!
பப்ஜி மதனை எதுக்கு வெளியில் விடணும் - விசாரணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி!!

ஆன்லைன் விளையாட்டில் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாக பேசிய யூடியூபர் பப்ஜி மதன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூபர் மதன் மீது கடந்த சில நாட்களாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. பெண்களை ஆபாசமாக பேசி தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்த்ததாக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 160 புகார்கள் மதன் மீது சுமத்தப்பட்டது. இதனையடுத்து மதன் தலைமறைவாகினார்.

மேலும் இவ்வாறாக ஆபாசமாக பேசி ஒளிபரப்புவதன் மூலம் மாதந்தோறும் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தாகவும் தெரியவந்துள்ளது. மதனின் யூடியூப் சேனலின் நிர்வாகி என்ற அடிப்படையில் மதனின் மனைவி கிரித்திகா கைது செய்யப்பட்டார். பின்னர் மதனை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். தற்போது மதன் தருமபுரியில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். மதன் அவரது நண்பர்கள் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

மதன் மீது ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக உபயோகித்தல், தடை செய்யப்பட்ட செயலியை உபயோகித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here