லட்ச கணக்கில் 20 ரூபாய் காயின்களை கொடுத்து கார் வாங்கிய யூடியூபர் இர்பான் – இணையத்தில் வைரல்!

0
லட்ச கணக்கில் 20 ரூபாய் காயின்களை கொடுத்து கார் வாங்கிய யூடியூபர் இர்பான் - இணையத்தில் வைரல்!

யூடியூப் பிரபலங்களில் முக்கியமாக விளங்குபவர் இர்பான். அவர் 2 லட்சம் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதுவும் 20 ரூபாய் காயின்களை மட்டும் லட்ச கணக்கில் சில்லறையாக கொடுத்து வாங்கி உள்ளார்.

யூடியூபர் இர்பான் கார்:

யூடியூப்பில் மூலம் அதிகமான நபர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி தனக்கென ரசிகர்களை பெற்று உள்ளனர். அந்த வகையில் யூடியூப்பில் உணவு விமர்சனம் செய்து பேமஸ் ஆனவர் இர்பான்.பல ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் என ரிவ்யூ செய்து தனது இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலில் பகிர்ந்து வருவது இவரது பழக்கம்.

மேலும் இவரை ரிவ்யூ எடுக்க வருமாறு ஹோட்டல் முதலாளிகள் அழைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இந்நிலையில் இவர் 2 லட்சத்திற்கு முழுவதும் 20 ரூபாய் காயின்களை சில்லறையாக கொடுத்து புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளதாக ஒரு வீடியோவை தன் சேனலில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன் தங்கைக்காக புது கார் வாங்க 2 லட்சத்திற்கு முழுவதும் 20 ரூபாய் காயின்களை சில்லறையாக கொடுத்து அந்த காரை வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மக்கள் சிலருக்கு 20 ரூபாய் காயின் இருப்பதே தெரியவில்லை, தெரிந்தாலும் அது செல்லாது என நினைக்கிறார்கள். அவர்களின் தப்பான கருத்தை மாற்றுவதற்காக தான் காரின் மொத்த விலையையும் சில்லரையாக கொடுத்து வாங்கினேன் என யூடியூபர் இர்பான் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here