குடிபோதையில் பப்பில் அராஜகம் செய்த டாடி ஆறுமுகத்தின் சன் – போலீசார் வலைவீச்சு!!

0

சமூக வலைதளமான யூடியூப் தளத்தில் சமையல் கலையின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் மது போதையில் செய்த ரகளையை அடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

குடிகார மகன்:

சமூக வலைத்தளமான யூடியூப் தளத்தில் சமையல் கலையின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் டாடி ஆறுமுகம். இவரை இந்த தளத்தில் அறிமுகப்படுத்தியது அவரது மகன் கோபிநாத் என்பது பலரும் அறிந்த ஒன்று. இதனை அடுத்து பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர். தற்போது டாடி ஆறுமுகத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில்,அவரது மகன் கோபி மது போதையில் செய்த ரகளைகள் அம்பலமாகியுள்ளது. நேரம் கடந்ததால் மது வழங்க முடியாது என மறுத்த பார் உரிமையாளரை கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்து,அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து பார் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோபிநாத் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here