நடிகர் சித்தார்த்தை தீர்த்து கட்டிய வீடியோ பதிவு.. அதிர வைக்கும் யூடியூப் நிறுவனத்தின் பதில்!!

0
8 வருடங்கள் கழித்து நடிகர் சித்தார்த்துக்கு நிறைவேறிய கனவு - அரசே அளித்த முக்கிய அங்கீகாரம்!
நடிகர் சித்தார்த் இறந்து விட்டதாக யூடியூப் சேனல் ஒன்று தவறாக வீடியோ பதிவிட்டுள்ளது. அதற்கு சித்தார்த் அந்த யூடியூப் சேனல் மீது புகார் அளித்துள்ளார். தற்போது யூடியூப் நிறுவனம் அளித்துள்ள அதிர்ச்சி பதிலை தன் ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு ஷேர் செய்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னனி ஹீரோக்களில் சித்தார்த்தும் ஒருவர். இவரின் சாக்கலேட் பாய் தோற்றத்திற்கே அடிமையாகியுள்ள ரசிகர் பட்டாளம் ஏராளம். தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிறந்த கதை அம்சம் உள்ள படங்களை இவர் தற்போது தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் சித்தார்த்.
 
இந்நிலையில் இளம் வயதில் இறந்த பிரபலங்கள் என்று யூடியூபில் வெளியான வீடியோ ஒன்றில் ஆரோக்கியமாக இருக்கும் நடிகர் சித்தார்த்தும் இறந்து விட்டதாக பதிவாகியுள்ளது. இதை முன்பே பார்த்த சித்தார்த் யூடியூப் நிறுவனத்திடம் இவ்வீடியோ பற்றி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் யூடியூப் நிறுவனமோ இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் தெரியவில்லை என கூறியுள்ளார்களாம். இந்த பதிலை கேட்டு நொந்த சித்தார்த் அதை தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here