யூ- டியூப் சேனல் துவங்கும் அரசு பள்ளிகள் – புதிய பாதையில் கற்பித்தல்!!!

0

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்பிக்கப்படும் நிலையில், சில அரசுப் பள்ளிகள் யூ- டியூப் சேனல் துவங்கி அதன் மூலம் கற்பித்தல் பணிகளை செய்து வருகிறது.

புதிய முயற்சி:

தற்போதுள்ள கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதற்கு பள்ளிகள் புதிய முயற்சிகளை செய்து வருகின்றது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பிக்கும் பணியை செய்து வருகின்றது. ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்கான பொருளாதார சூழல் இல்லாத காரணத்தால் தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை ஒளிபரப்பு செய்கின்றது.

அரசு மருத்துவமனைகளில் 85 செவிலியர் காலிப்பணியிடங்கள் – இன்று நேர்முகத்தேர்வு!!

ஆனால் மாணவர்களின் கற்பித்தலுக்காக அரசு புதிய தொழிநுட்பங்களை பயன்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர்கள் மத்தியில் நிலவி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த கணினி திட்டத்தின் மூலம் கற்பித்தல் பணிகளை செய்வதற்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பாடத்திட்டத்தை எளிதில் விளக்கும் வீடியோக்கள், தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் (Tamilnadu teachers platform) என்ற இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் சிறந்த விடியோக்கள் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் தீக்ஷ செயலியில் பதிவேற்றப்படும். அதிலும் சில அரசு பள்ளிகள் கூடுதல் முயற்சிகளை எடுத்து தனியாக யூ- டியூப் சேனல் துவங்குவது, டிவீட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களுக்கென்று பிரத்யேக பக்கங்களை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை சிறப்பாக இருக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சியை தருவதாக பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here