சோகத்தில் முடிந்த ‘டுடே செல்ஃபீ’ – சென்னையில் நடந்த பரிதாபம்!!

0
சோகத்தில் முடிந்த 'டுடே செல்ஃபீ' - சென்னையில் நடந்த பரிதாபம்!!
சோகத்தில் முடிந்த 'டுடே செல்ஃபீ' - சென்னையில் நடந்த பரிதாபம்!!

தற்போதைய காலங்களில் இளைஞர்களுக்கு பாதுகாப்பு என்ற நினைப்பினை மறைந்து செல்ஃபீ மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் பல இளைஞர்கள் தொடர்ந்து தங்களது உயிரை இழந்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் சென்னையில் ஓர் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சஞ்சீவி(18 வயது) என்னும் மாணவர் சென்னையில் கேட்டரிங் 2ம் வருடம் படித்து வருகிறார்.

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயங்காது – தெற்கு ரயில்வே அதிரடி!!

தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ள சஞ்சீவி, தனது சித்தப்பாவுடன் ஏர் உழும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சென்று டிராக்டர் மூலம் பணிகளை மேற்கொண்ட அவனது சித்தப்பா உணவு அருந்துவதற்காக டிராக்டரில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது செலஃபீ மோகத்தில் அந்த மாணவன் டிராக்டர் மீது ஏறி  செல்ஃபீ‘   எடுத்துக்கொண்டு ‘டுடே டிரைவிங்’ என்று தனது வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் நடந்த பரிதாபம்!!
சென்னையில் நடந்த பரிதாபம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து டிராக்டரை இயக்கிய அந்த மாணவர் அங்கிருந்த 60அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் டிராக்டருடன் விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 4 மின் மோட்டார்கள் அமைத்து சுமார் 4 மணி நேரமாக தண்ணீரை வெளியேற்றி சஞ்சீவின் உடலை சடலமாக மீட்டனர். இந்த நிகழ்வு அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here