சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – சிறை தண்டனை அளித்த மகிளா நீதிமன்றம்!!

0
21 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்:

புதுக்கோட்டையில் இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரஞ்சித் என்ற இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை அளித்தது பெண்கள் நீதிமன்றம். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை பெண்கள் நீதிமன்றம்:

பெண்களுக்கு மீதான வன்முறைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண்களை பாதுகாக்க  பல்வேறு சட்டங்களை கொண்டுவந்தாலும் வன்முறைகளானது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் துபாய் போன்ற வெளிநாடுகளில் இதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளதால் அங்கு குற்றம் சற்று குறைவாக உள்ளது.

தற்போது இந்த வன்முறைகளானது சிறு வயது குழந்தைகளை குறிவைத்து நடக்கிறது என்பதுதான் வருத்தப்படக்கூடிய சம்பவமாக இருந்து வருகிறது. குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போதும் இத்தகைய கொடூரமானது இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை கண்டித்து போராட்டங்கள் போன்றவையும் நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.


தற்போது இதேபோல் புதுக்கோட்டை இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் ரஞ்சித் என்ற இளைஞருக்கு 17 ஆண்டுகள்  சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here