எதிர்பாராத விதமாக நடந்த கார் விபத்து., இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இர்பான் கொடுத்த உறுதி!!
வித விதமான உணவுகளை உண்டு அது குறித்து youtube ல் வீடியோ போட்டு பிரபலமானவர் தான் இர்பான். இவருக்கு கடந்த மாதம் 14 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து மறுவீட்டு விழாவை முடித்து விட்டு இர்பான் குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர். அப்போது சென்னை செங்கல்பட்டு, மறைமலைநகர் பகுதியில் காரில் வந்துள்ளனர். அந்த நேரத்தில் சாலையில் வந்த பத்மாவதி என்ற 55 வயது பெண் மீது இவர்கள் வந்த கார் மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து நடந்த விசாரணையில் இர்பானின் மச்சான் தான் காரை ஓட்டி வந்ததாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து இர்பான் தனது youtube சேனலில் உருக்கமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் நடந்ததால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறோம். இந்த நேரத்தில் ஒவ்வொரு சேனலும் அவரவர் இஷ்டத்துக்கு பேசுவது, எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் என்னால் முடிந்த அளவுக்கு அந்த குடும்பத்திற்கு உதவி செய்வேன் என உறுதியளித்துள்ளார். இதோடு இந்த விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் தாயார் கொடுத்த பேட்டியில் அவர் பேசியதாவது, என்னுடைய மகளை இழந்ததில், மிகுந்த வருத்தத்தில் நாங்கள் இருந்து வருகிறோம். என் மகளுக்கு கடன் கொடுத்தவர்கள் தினமும் அந்த கடனை திருப்பி தரும்படி கட்டாயப்படுத்தி வருகின்றனர் என தங்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.