மதுரை வாழ் மக்களே.., இனி இதற்கும் உரிமம் கட்டாயம் தேவை.., மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!!!

0
மதுரை வாழ் மக்களே.., இனி இதற்கும் உரிமம் கட்டாயம் தேவை.., மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!!!
மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் பாதுகாக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது போன்று மாடுகள் தெருக்களில் சுற்றித் திரிவதால் பல சாலை விபத்துகளும் ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டு இருந்தனர். ஆனாலும் தற்போது வரை சாலைகளில் மாடுகள் திரிந்த வண்ணம் உள்ளது. தற்போது இதை தடுக்க மதுரை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது இனி வரும் நாட்களில் சாலைகளில் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் சுற்றி திரிந்தால் 25 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் கால்நடைகள், செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமையாளர்கள் ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும். அதன்படி மாடுகளுக்கு ரூ.100-ம், கன்றுகளுக்கு 50ம், குதிரைகளுக்கு 150, கழுதைகளுக்கு 150, பன்றிகளுக்கு 1000, நாய்களுக்கு ரூ.100 செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். ஒருவேளை உரிமம் பெறாமல் கால்நடைகளை வளர்த்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here