PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.., இனி பணத்தை பாதியிலே எடுக்கலாம்.., வெளியான அறிவிப்பு!!!

0
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.., இனி பணத்தை பாதியிலே எடுக்கலாம்.., வெளியான அறிவிப்பு!!!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு கால நலன் கருதி மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஊதியத்தை அந்த நபர்கள் தங்களது ஓய்வு காலத்தில் தான் எடுக்க முடியும் என்ற நிபந்தனையும் உள்ளது. இந்நிலையில் இப்போது சில காரணங்களுக்காக PF பணத்தை ஊழியர்கள் பாதியிலே எடுக்கலாம் என சொல்லப்படுகிறது. அதாவது புது வீடு கட்டுதல் மற்றும் வீட்டை புதுப்பித்தல், வீட்டு கடனை திருப்பிச் செலுத்துதல் போன்ற காரணங்களுக்காக PF பணத்தை பாதியில் எடுக்கலாம்.
அதே போன்று மருத்துவ சிகிச்சை, குழந்தைகளின் திருமணம் மற்றும் படிப்புக்காக பணத்தை எடுக்கலாம். இது தவிர நாம் வேலை பார்க்கும் நிறுவனம் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்ததால் தங்களது செலவினங்களுக்காக PF பணத்தை ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்ற சரியான காரணங்கள் இருந்தால் PF பணத்தை பாதியிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here