வைகை புயல் வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு – அதுவும் இந்த படத்திலா??

0

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. குறிப்பாக வடிவேலு, மறைந்த நடிகர் முரளி கதா பாத்திரத்தை நிரப்ப உள்ள ரசிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

மறைந்த நடிகர் முரளி மற்றும் வைகை புயல் வடிவேலு இவர்களின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுந்தரா டிராவல்ஸ். முழுக்க முழுக்க நகைச்சுவை தன்மையோடு வெளிவந்து ஹிட் அடித்த சில படங்களில் இந்த படமும் ஒன்று. குறிப்பாக முரளியும் வடிவேலுவும் மிக பழைய பஸ்சை வைத்து கொண்டு படும் இன்னல்களை காமெடி கலந்து இயக்குனர் அசோகன் அழகாக படமாக்கி இருப்பார்.

இப்படம் அடைந்த வெற்றியால் இதனுடைய இரண்டாம் பாகம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது முரளி இறந்துவிட்டதால் அவரது கதாபாத்தில் கருணாகரனும், வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை. அது விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here