
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஒரு சில கேரக்டரில் நடித்து வந்த இவர் இயக்குனர் அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் தான் ரசிகர்கள் அவரை யோகி பாபு என்று அழைத்தனர். அடுத்தடுத்து ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து நிற்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது அவர் இல்லாமல் படம் இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இப்பொழுது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். இப்படி முன்னணி காமெடி நடிகராக விளங்கும் யோகி பாபு ஒரு நாளைக்கு பல லட்சம் வரை சம்பளம் வாங்க, அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.