யோகி பாபு உடன் கைகோர்க்கும் நடிகை லட்சுமி மேனன் – அதுவும் இந்த மாதிரியான ஒரு கதையிலயா!!

0
"நீங்க நடிச்சா எந்த படமும் ஓடாது" - யோகிபாபுவை கடுப்பேத்திய நெட்டிசன்! நெத்தியடி பதிலளித்த நடிகர்!!

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு நாயகியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

யோகி பாபுவுக்கு ஜோடி :

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்ற வரிசையில் தனக்கான தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் யோகி பாபு. சமீப காலமாக இவர் நடிக்காத ஒரு படம் கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இவர் காமெடி நடிகராக நடித்த டாக்டர் திரைப்படம்,பெருவாரியான வெற்றியை பெற்றது. மேலும்,அவர் கதாநாயகனாக நடித்த மண்டேலா மற்றும் தர்மபிரபு உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து,சந்தானம் மற்றும் சூரி வரிசையில் இவரும் கதாநாயகனாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். புதுமுக இயக்குனர் முருகேஷ் பூபதி என்பவர் இயக்கத்தில்,இவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும்,  அவருக்கு நாயகியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.இது ஒரு காதல் படமாக உருவாக உள்ளதால்,இவர்கள் இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் வேற லெவலில் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here