சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த டிஐஜி விஜயகுமார் திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில் மன உளைச்சல் காரணமாக தான் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தமிழக காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் பணிச்சுமை, மன அழுத்தத்தை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு மன உளைச்சலை குறைக்கும் வகையில் யோகா, நடை பயிற்சி போன்றவை நடத்தப்பட்டது. இதில் அம்மாவட்ட உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் போலீசார் என அனைவரும் கலந்து கொண்டனர். இதையடுத்து பேசிய கமிஷனர் சேலம் மாவட்டத்தை போல அனைத்து மாநகர போலீஸ் நிலையங்களில் அதிகாரிகள் மன உளைச்சலை குறைக்க இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
TNPSC தேர்வுக்கு ரெடியாகுறீங்களா…, இந்த வினாக்களுக்கு மட்டும் பதில் தெரியுதான்னு பாருங்க!!