படுக்கையில் மிக மோசமான நிலையில் வெளிவந்த யாஷிகாவின் புகைப்படம் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

சில நாட்களுக்கு முன்பு மிக மோசமான விபத்தில் சிக்கிய யாஷிகா தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் யாஷிகாவின் நிலைமையை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பேமஸ் ஆன யாஷிகாவிற்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ். முதல் விளையாட்டு தனமாக பிக் பாஸ் வீட்டினுள் பொழுதை கழித்த யாஷிகா பின்னர் அனைத்து டாஸ்க்குகளிலும் வெற்றி பெற்று பிற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தார்.

பின்னர் பைனலுக்கு முந்தைய வாரம் குறைந்த ஓட்டுகள் வாங்கியதால் எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும்  அந்த பிக் பாஸ் வாய்ப்பு இவரை கைவிடவில்லை. அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி கலக்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த மாதம் பாண்டிச்சேரி சென்று நண்பர்களுடன் இரவு காரில் சென்னை திரும்பிய யாஷிகாவிற்கு மோசமான விபத்து ஏற்பட்டது.

இவரின் தோழி பவானி என்பவரும் அந்த விபத்தில் உயிர் இழந்தார்.   யாஷிகாவின் ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் முழுவதும் குணமடைய 6 மாதம் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அவரது அம்மா இவருக்கு உணவு ஊட்டி விடுகிறார். கால் முழுவதும் கட்டு போட்டு மிக மோசமான நிலையில் எழுந்திரிக்க கூட முடியாத வண்ணம் யாஷிகா உள்ளார். இதற்கு ரசிகர்கள் சீக்கிரம் குணமடையவேண்டும் என்று ஆறுதல் கூறிவருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here