ஒரே விபத்தால் பறிபோன யாஷிகாவின் பட வாய்ப்புகள்… கருணை காட்டாத தயாரிப்பாளர்கள்!!!

0
இந்த வீடியோல உங்கள அணு அணுவா ரசிக்கலாம் யாஷிகா.. பார்த்ததும் அழகில் பதற வைத்த போட்டோஷூட்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சமீபத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்தார். இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு தான்  கண்விழித்தாக சொல்லப்பட்டது. இருப்பினும் அவரின் உடல் நலம் சரியாக குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என மருத்துவர்கள் கூறி உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இவர் கமிட்டாகிய  படங்களில் வேறு நடிகைகளை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் ஆலோசனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் மொழி மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் யாஷிகா ஆனந்த். இவர் தன்னுடைய சிறுவயதிலேயே திரைக்கு வந்தவர். இருப்பினும் இவர் அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. இவர் மக்கள் மற்றும் இளசுகள் மத்தியில் பரிச்சயமாக காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதன் மூலம் அவருக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

மேலும் திரைப்படங்கள் மூலம் கிடைத்த ரசிகர்களை விட இந்த நிகழ்ச்சி மூலம் சேர்ந்தது தான் அதிகம். இதன் மூலம் கிடைத்த புகழும் மற்றும் தனது போட்டோஷூட் மூலமாக  இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வர தொடங்கியது. இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இவர் உட்பட இவரின் 3 நண்பர்கள் இணைந்து புதுச்சேரிக்கு காரில் பயணம் மேற்கொண்ட போது துர்திஷ்டவசமாக விபத்து ஏற்பட்டு யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி அந்த  இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் உடன் இருந்த 2  ஆண் நண்பர்களும்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது யாஷிகா உடல் நிலை சற்று தேறி வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இவர் பூரண குணமடைய ஏறக்குறைய இன்னும் ஒரு வருடமாவது ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இவர் கமிட்டான படங்கள் பாதிலேயே நிற்பதால் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் செய்வதறியாமல் உள்ளனர். இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் யாஷிகாவுக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைத்து படத்தை முடிக்க ஆலோசனை செய்து வருகின்றனர். இதனால் ஒரு விபத்தினால், படவாய்ப்புக்காக அவர் செய்த பல முயற்சிகள் வீணாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here