ஐபிஎல் தொடருக்காக தமிழக வீரரான யார்க்கர் கிங் டி. நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார்.
டி. நடராஜன்:
இந்தியாவில் நடைபெற உள்ள, ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதிக்கு இன்று முதல் 11 நாட்களே சரியாக உள்ளது. இதனால், ஐபிஎல்லில் பங்குபெற உள்ள 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். சர்வதேச அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வரும் 22ம் தேதியுடன் விளையாடி முடிக்க உள்ளன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த தொடருக்கு பிறகு இந்திய வீரர்களும், தங்களது ஐபிஎல் அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் மூலம், சர்வதேச இந்திய அணிக்கு தேர்வான தமிழக வீரர் டி. நடராஜன் பயிற்சிக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தற்போது இணைந்துள்ளார். சமீபகாலங்களில் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த இவர், மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்க உள்ளார்.
இவர், இந்த எதிர்வரும் ஐபிஎல் தொடரில், தனது சிறந்த யார்க்கரை வெளிப்படுத்தும் விதம், விரைவில் இந்திய அணியில் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யார்க்கர் கிங்கான இவர், 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இணைய இந்த ஐபிஎல் தொடர் முக்கிய பங்கு வகிக்கும் என தமிழக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Batters, get ready to dance 🕺🏽💃🕺🏽💃🕺🏽💃
The yorker-king is here! 🤟😎#OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 pic.twitter.com/NrN94W9hNI
— SunRisers Hyderabad (@SunRisers) March 20, 2023