Monday, June 14, 2021

ஜெய் பட நடிகைக்கு டும் டும் டும் … மாப்பிள்ளை யார் தெரியுமா???

Must Read

தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் நடித்து வருபவர் யாமி கவுதம். தமிழில் ‛கவுரவம்,போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், திடீரென இன்று திருமணம் செய்து கொண்டார்.

ஜெய் பட நடிகைக்கு டும் டும் டும்:

படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் என கவனம் செலுத்தி வருபவர் யாமி கவுதம். தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக இவர் உரி, சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதித்யா தர் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்தது.

இவர்கள் இருவரது காதலையும் என்று கொண்ட குடும்பத்தினர்; திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் இவர்களுக்கு நேற்று திடீர் என திருமணம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் நெருங்கிய குடும்பத்தினர், இரு தரப்பு நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து நடிகை யாமி கவுதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் எங்கள் குடும்பத்தினர் ஆசீர்வாதத்துடன், இன்று எங்கள் திருமணம் நடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை எங்கள் குடும்பத்துடன் கொண்டாடினோம். அன்பு மற்றும் நட்பின் பயணத்தை நாங்கள் தொடங்கும்போது, உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் நாங்கள் வேண்டுகிறோம். இப்படிக்கு யமி மற்றும் ஆதித்யா என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லாக்டவுனில் ஏற்ற, இறக்கத்தை சந்திக்கும் தங்கம் விலை: இன்று விலை சரிவு..!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -