சங்கீத நாடக அகாடமி விருதை பெற்ற பிரபல நடிகர்.., வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்!!

0
சங்கீத நாடக அகாடமி விருதை பெற்ற பிரபல நடிகர்.., வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்!!
சங்கீத நாடக அகாடமி விருதை பெற்ற பிரபல நடிகர்.., வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்!!

தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினி காந்த்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் ரஜினி காந்த். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. தற்போது பீஸ்ட் படம் இயக்கிய நெல்சன் படைப்பில் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படம் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள், படக்குழுவினர் என எல்லாரையும் சோகத்தில் மூழ்கடித்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

ஏழாம் அறிவு பட வில்லன் டாங்லி குழந்தைகளை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!!

அதாவது ரஜினியின் மனைவியின் நெருங்கிய சொந்தமான Y.G. மகேந்திரன் கடந்த 61 ஆண்டுகளாக 5,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் தோன்றி பல வேடங்களில் நடித்து நம்மை சிந்திக்க மற்றும் மகிழ்வித்தற்கு சங்கீத நாடக அகாடமி அவருக்கு விருது வழங்கியுள்ளது. இதற்கு வாழ்த்தும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here