போட்டோவால் நேர்ந்த விபரீதம்., பணியை இழந்த பெண் பேராசிரியர் – 99 கோடி நஷ்ட ஈடு கேட்கும் கல்வி நிறுவனம்!!

0
போட்டோவால் நேர்ந்த விபரீதம்., பணியை இழந்த பெண் பேராசிரியர் - 99 கோடி நஷ்ட ஈடு கேட்கும் கல்வி நிறுவனம்!!

கொல்கத்தா சேவியர் பல்கலையை சார்ந்த  பெண் உதவி பேராசிரியை தனது இன்ஸ்டாவில் தவறான புகைப்படத்தை பதிவிட்டதாக கூறி,  அவரை பணி நீக்கம் செய்து கல்வி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

பணி நீக்கம்:

கொல்கத்தாவில் இயங்கி வரும் சேவியர் பல்கலையில் உதவி பேராசிரியராக ஒரு பெண் பணியாற்றி வந்தார். அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில்  உள்ளாடையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளதாக அக்கல்லூரி மாணவரின் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து, இந்தக் கல்வி நிறுவனம் சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியை மீது  நடவடிக்கை எடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கல்வி நிறுவனத்தின் மதிப்பை சீர்குலைத்த காரணத்திற்காக  அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.  மேலும், அவர் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், 99 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும்  நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து, பதிவிட்டு அந்த பேராசிரியை  அது பழைய புகைப்படம் என்றும், பணிக்கு சேரும் போது நடந்தது என்றும் குறிப்பிட்டார்.

அதனை, தற்போது யாரோ லீக் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். பெண் பேராசிரியைக்கு எதிராக அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸ், கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை  ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here