உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கே எல் ராகுல் இடத்தை பிடித்த இளம் வீரர்…, பிசிசிஐ வெளியிட்ட அணி விவரம் உள்ளே!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கே எல் ராகுல் இடத்தை பிடித்த இளம் வீரர்..., பிசிசிஐ வெளியிட்ட அணி விவரம் உள்ளே!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கே எல் ராகுல் இடத்தை பிடித்த இளம் வீரர்..., பிசிசிஐ வெளியிட்ட அணி விவரம் உள்ளே!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, வரும் ஜூன் 7ம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பலப்பரீட்சை செய்ய உள்ளது. இதற்கு தயாராவதற்கு முன்பாக, இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில், லக்னோ அணியின் கேப்டனான கே எல் ராகுல், RCB அணிக்கு எதிரான போட்டியில் தொடையின் தசை பகுதியில் பலத்த காயம் அடைந்தார். இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் விலகி உள்ளார்.

இந்த சாதனையையும் CSK விட்டு வைக்கலயா?? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரம் இதோ!!

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கே எல் ராகுல் விலகியது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இவரது இடத்தை பூர்த்தி செய்ய பிசிசிஐ, இந்தியாவின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான இஷான் கிஷனை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி:

  • ரோஹித் சர்மா(சி), சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, பாரத், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், உனத்கட், இஷான் கிஷன்.
  • காத்திருப்பு வீரர்கள்: ருதுராஜ், சூர்யகுமார் யாதவ், முகேஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here