
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள, இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், மாற்று வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்ய தயாராகி வருகிறது.
பிசிசிஐ:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐயானது சமீபத்தில் அறிவித்து இருந்தது. முதுகு மற்றும் விபத்து காரணமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இதற்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால், இவர்களுக்கு பதில், ஷர்துல் தாக்கூர், அஜிங்க்யா ரஹானே மற்றும் கே.எஸ். பாரத் உள்ளிட்டோர் அணியில் இடம் பெற்று இருந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த உலக டெஸ்ட் அணிக்கான இந்திய அணியை, அறிவித்த போதே காத்திருப்பு வீரர்களையும் அறிவித்திருந்தனர். அதாவது, 15 பேர் கொண்ட உத்தேச அணியில் யாராவது, காயம் அல்லது பிற காரணங்களால் விலக வேண்டி இருந்தால், அவர்களுக்கு பதில், காத்திருப்பு வீரர்களை இந்திய அணியில் இணைத்து கொள்வார்கள். இந்த காத்திருப்பு வீரர்களாக, ருதுராஜ், சர்ஃபராஸ் கான், இஷான் கிஷன், முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இருப்பார்கள் என முன்பு தகவல் வெளியாகி இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் இத்தனை பேர் பலியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
இதன்படி, தற்போது உத்தேச அணியில் உள்ள, கே எல் ராகுல் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் காயங்களால் அவதிப் பட்டு வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டிக்கான பயிற்சியை தொடங்குவதற்குள், இவர்களது காயங்கள் சரியாக வில்லை என்றால், ருதுராஜ், ஜெய்ஸ்வால் மற்றும் சர்ப்ராஸ் ஆகியோரில் இருவரை உத்தேச அணியில் இணைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.