
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறிய அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் அடுத்த யுத்தத்துக்கு தயாராகி உள்ளனர். அதாவது, சர்வதேச இந்திய அணியானது ஜூன் 7ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த இறுதிப் போட்டியானது இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்காக பிசிசிஐ ஏற்கனவே பல திட்டங்களை வகுத்திருந்தது. இதில், ஒன்று தான் இந்திய வீரர்களை 3 குழுக்களாக பிரித்து இங்கிலாந்திற்கு பயிற்சிக்கு அனுப்பி வைத்தல். இதன்படி, ஐபிஎல்லில் லீக் சுற்றோடு வெளியேறிய RR, RCB, KKR, PBKS, DC மற்றும் SRH அணியில் உள்ள இந்திய வீரர்கள் நாளை (மே 23) பயிற்சிக்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் தகவல்!!
இதில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவர்.