WTC 2023: இறுதிப் போட்டியில் இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை…, முன்னாள் பயிற்சியாளர் ஓபன் டாக்!!

0
WTC 2023: இறுதிப் போட்டியில் இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை..., முன்னாள் பயிற்சியாளர் ஓபன் டாக்!!
WTC 2023: இறுதிப் போட்டியில் இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை..., முன்னாள் பயிற்சியாளர் ஓபன் டாக்!!

ஐசிசி சார்பாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியில், இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை வரும் ஜூன் 7ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. இதற்காக, இரு அணிகளும் முன்கூட்டியே இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்திய அணியை பொறுத்த வரையில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடத்திற்கு இரண்டு வீரர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நடைபெற்று வருகிறது. அதாவது, காயங்கள் காரணமாக ரிஷப் பண்ட் ஓய்வில் இருப்பதால், கே எஸ் பரத் மற்றும் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் என்ற அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், இவர்களில் யார் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்பது தான் பெரும் கேள்வி குறியாகி உள்ளது. இதற்கு, இந்திய ஆணின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார். அதாவது, உள்ளூர் டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் கொண்ட கே எஸ் பரத்தையே பிளேயிங் லெவனில் களமிறக்கலாம் கூறியுள்ளார்.

அவங்கள எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க.., தனத்திடம் மல்லுக்கட்டும் முல்லை.. மூர்த்தி செய்யப்போவது என்ன!!!!

ரவி சாஸ்திரி தேர்வு செய்த பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே எஸ் பரத், ரகானே, ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் (அல்லது) தாகூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here