WTC பைனல் 2023: ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடும் ஒரே இந்திய வீரர் இவர் தான்…, கேமரூன் கிரீன் ஓபன் டாக்!!

0
WTC பைனல் 2023: ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடும் ஒரே இந்திய வீரர் இவர் தான்..., கேமரூன் கிரீன் ஓபன் டாக்!!
WTC பைனல் 2023: ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடும் ஒரே இந்திய வீரர் இவர் தான்..., கேமரூன் கிரீன் ஓபன் டாக்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். சம பலத்துடன் இருக்கும் இரு அணிகள் மோத உள்ள இறுதிப் போட்டியில் எந்த அணி வென்று சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு, இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எப்படி அடித்து நொறுக்குவது என தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் இந்திய அணிக்கு சவால் விடும் வீரர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்…, இந்தியாவின் இந்த 3 வீரர்களுக்கு மட்டுமே இடம்!!

அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி எங்களுக்கு பெரும் சவாலாக இருப்பார் என ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார். மேலும், சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் விராட் கோலி தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என கூறியுள்ளார். மேலும், தனது பேட்டிங் குறித்து கேமரூன் கிரீன், டி20 போட்டியில் இருந்து டெஸ்ட் தொடருக்கு உடனே பேட்டிங் அணுகுமுறையை மாற்றுவதில் பிரச்சனை இருக்காது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here