உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்…, இந்தியாவின் இந்த 3 வீரர்களுக்கு மட்டுமே இடம்!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்..., இந்தியாவின் இந்த 3 வீரர்களுக்கு மட்டுமே இடம்!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்..., இந்தியாவின் இந்த 3 வீரர்களுக்கு மட்டுமே இடம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது சீசன் தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த தொடரின் முதல் சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை வெல்ல தவறியது. தற்போது, மீண்டும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வரும் 7ம் தேதி நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியை வென்று நீண்ட உலக கோப்பைக்கான ஏக்கத்தைத் இந்திய அணி தீர்க்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய அணி கடந்த மே மாத இறுதி முதல் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சீசனுக்கான பெஸ்ட் லெவனை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா சார்பாக ஜடேஜா, ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் பெஸ்ட் ‘லெவன்’: கவாஜா (ஆஸ்திரேலியா), கருணாரத்னே (இலங்கை), பாபர் ஆசம் (பாகிஸ்தான்), ஜோ ரூட் (இங்கிலாந்து), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ஜடேஜா (இந்தியா), ரிஷப் பண்ட்(இந்தியா), அஷ்வின் (இந்தியா),கம்மின்ஸ் (சி)(ஆஸ்திரேலியா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), ரபாடா (தென் ஆப்ரிக்கா).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here