“ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம்”…, போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!!

0
“ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம்
“ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம்"..., போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!!

இந்தியாவின் பெருமையை ஒலிம்பிக் அரங்கில் உலகறிய செய்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலர், பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதாவது, கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போராட்டத்தில், பிரிஜ் பூஷன் சிங்கால் பல பெண் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். இதனால், இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டகாரர்கள் அனைவரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கிச் செல்ல முற்பட்டபோது, டெல்லி காவல் துறையினர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

TET தேர்வர்களே…, நியமன தேர்வு குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

இந்த நிகழ்வு, விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா தாங்கள் ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தங்களை ஹரித்வாரில் கங்கை நதியில் வீசி எறிவோம் எனக் கூறியுள்ளனர். மேலும், இந்தப் பதக்கங்கள் மல்யுத்த கூட்டமைப்பின் முகமூடியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, இதை நாங்கள் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here