புதிய ஜெர்சியுடன் ஸ்மிருதி மந்தனா…, RCB அணி நிர்வாகம் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

0
புதிய ஜெர்சியுடன் ஸ்மிருதி மந்தனா..., RCB அணி நிர்வாகம் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!
புதிய ஜெர்சியுடன் ஸ்மிருதி மந்தனா..., RCB அணி நிர்வாகம் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

WPL 2023:

மார்ச் 4ம் தேதி முதல் இந்தியாவில் ஐபிஎல் போல, மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) தொடர் தொடங்க உள்ளது. மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (RCB), டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் பங்குபெற உள்ளன. இந்த 5 அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அனைத்தும் மும்பையில் மைதானங்களை மையமாக கொண்டே நடைபெற இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சர்வதேச இந்திய மகளிர் அணியானது டி20 உலக கோப்பையை விளையாடி முடித்த நிலையில், இந்திய வீராங்கனைகள் அனைவரும் WPL தொடருக்கான அணியில் இணைந்துள்ளனர். இந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள RCB அணியில் இணைந்துள்ளார்.

நியூசிலாந்துக்கு பறக்க இருக்கும் பும்ரா…, இந்த முடிவை பிசிசிஐ தான் எடுத்தா?? வெளியான அப்டேட்!!

இந்நிலையில், RCB அணியானது, தங்களது ஜெர்சியை அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சியானது, ஐபிஎல்லில் உள்ள RCB அணியின் ஜெர்சி போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், WPLலில் RCB அணிக்கு ஸ்பான்சராக உள்ள கஜாரியா டைல்ஸ் மற்றும் பூமா நிறுவனத்தின் பெயர் இந்த ஜெர்சியில் பதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here