WPL 2023: முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ்!!

0
WPL 2023: முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ்!!
WPL 2023: முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ்!!

இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியானது டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து இறுதிப் போட்டியில் மோத உள்ளது.

WPL:

இந்தியாவில் முதன் முறையாக மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 5 அணிகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்த தொடரில், RCB மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது லீக் சுற்றுடன் வெளியேறியது. இதில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது, 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, 2 வது மற்றும் 3 வது இடத்தை பெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்று நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியானது, 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளது.

ஐபிஎல்லில் களமிறங்க இருக்கும் ரிஷப் பண்ட்?? ரிக்கி பாண்டிங் கொடுத்த ஹிண்ட்!!

WPL லீக் தொடரில், இந்த இரு அணிகளும் 2 முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். இதனால், இந்த WPL லின் முதல் கோப்பையை யார் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த WPL தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து ரசிகர்களை கவர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here