
மகளிருக்கான ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியிடன் இந்திய அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்து பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WIPL:
இந்தியாவில் மகளிருக்கான ஐபிஎல் தொடரின் முதல் சீசன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் சீசனில் மும்பை, லக்னோ, பெங்களூர், டெல்லி மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களை மையமாக கொண்டே 5 அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக முன்பு தகவல் வெளியாகி இருந்தன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும், இந்த 5 அணிகளுக்கான வீராங்கனைகளை தேர்வு செய்வதற்காக, ஏலமானது டெல்லியில் பிப்ரவரி 10 அல்லது 11 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு பிறகுதான், WPL மகளிர் அணிகளுக்கான முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே எல் ராகுல்-அதியா ஷெட்டி தம்பதியின் வைரலாகும் வீடியோ.., உங்க ஜாலிக்கு ஒரு அளவே இல்லையா!!!
ஏலத்தில் போர்டு கேப்டு மற்றும் அன்கேப்டு என வீராங்கனைகளை பிரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி, WPL ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழிகாட்டியாகவும், பந்து விச்சு பயிற்சியாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.