
மகளிருக்கான பிரீமியர் தொடரில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி 2 வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
WPL:
மும்பையில் நடைபெற்று வரும் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையான சோபியா டங்க்லி 4 ரன்களிலேயே வெளியேறினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால், லாரா வோல்வார்டுடன் (57) இணைந்த ஹர்லீன் தியோல் (31) அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இதன் விளைவால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ஆஷ்லே கார்ட்னர் 51* ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 18.4 ஓவரின் 136 ரன்களிலேயே சுருண்டது. இதனால், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, WPL 2 வது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டிகளின் முடிவில், டெல்லி கேபிடல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 4 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.