உலகளவில் 50 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் மக்கள்..!

0

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர்.

3 லட்சத்தை தாண்டிய பலி..!

உலகளவில் இதுவரை 4,989,095 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 324,966 ஆக உள்ளது. மேலும் இதுவரை 1,959,260 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் அதிக பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளுடன் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகள் ரிப்போர்ட்:

அமெரிக்காவில் இதுவரை 1,570,583 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 93,533 பேர் உயிர் இழந்துள்ளனர். இத்தாலியில் 226,699 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 32,169 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 278,803 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 27,778 பேர் உயிர் இழந்துள்ளனர். ரஷ்யாவிலும் இதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அங்கு இதுவரை 299,941 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 2,837 பேர் உயிரிழந்து உள்ளனர். பிரேசில் நாட்டில் இதுவரை 271,885 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 17,983 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் இதுவரை 177,827 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 8,193 பேர் உயிர் இழந்து உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் 180,809 பேர் பாதிக்கப்பட்டும் 28,022 பேர் உயிரிழந்து உள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை 248,818 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 35,341 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here