உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர்.
3 லட்சத்தை தாண்டிய பலி..!
உலகளவில் இதுவரை 4,894,278 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 320,188 ஆக உள்ளது. மேலும் இதுவரை 1,908,111 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் அதிக பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளுடன் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகள் ரிப்போர்ட்:
அமெரிக்காவில் இதுவரை 1,550,294 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 91,981 பேர் உயிர் இழந்துள்ளனர். இத்தாலியில் 225,886 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 32,007 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஸ்பெயினில் 278,188 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 27,709 பேர் உயிர் இழந்துள்ளனர். ரஷ்யாவிலும் இதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அங்கு இதுவரை 290,678 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 2,722 பேர் உயிரிழந்து உள்ளனர். பிரேசில் நாட்டில் இதுவரை 255,368 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 16,853 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் இதுவரை 177,289 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 8,123 பேர் உயிர் இழந்து உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் 179,927 பேர் பாதிக்கப்பட்டும் 28,239 பேர் உயிரிழந்து உள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை 246,406 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 34,796 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |