சேத்து வைங்கப்பா!! தண்ணி ரொம்ப முக்கியம்!! இன்று உலக தண்ணீர் தினம்!!

0

நம் அன்றாட தேவைகளுக்கு உகந்த ஒரு முக்கிய மூலப்பொருள் தண்ணீர். இன்றைக்கு உள்ள நிலையில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து வருகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி மக்கள் நினைவுக்கு கொண்டு வருவதற்காக இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக நீர் தினம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்று சும்மாவா சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.  அந்த அளவுக்கு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த திருக்குறள் நினைவுபடுத்துகிறது. நாம் வசிக்கும் உலகம் மூன்று பக்கம் கடல் ஒரு பக்கம் நில அமைப்பை உடையது. இது எல்லாரும் அறிந்தது தான். விஷயம் என்னவென்றால் நம்மை சுற்றியுள்ள கடல் நீரை எதற்கும் பயன்படுத்த முடியாது என்பது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒவ்வொரு நாளும் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் முக்கியமான மூலதனமாக நீர் இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரைக்கும் நமக்கு தண்ணீரின் தேவை அதிகமாகவே இருக்கிறது. முந்தைய காலங்களில் ஆறு, குளங்கள், ஏரிகள் என நீர்நிலைகளிலிருந்து தான் குடிப்பதற்கும் வீட்டு தேவைகளுக்கும் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. அந்த காலங்கள் எல்லாம் செழிப்பாகவே காணப்பட்டது. இன்று அது காணாமல் போய்விட்டது.

கொரோனா பரவல் எதிரொலி – மநீம கட்சி வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இப்போதோ நம் ஒவ்வொரு தேவைகளுக்கும் பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் இப்படி இருக்க சோமாலியா போன்ற பல உலக நாடுகளில் உள்ள மக்கள் குடிப்பதற்கு கூட நீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். என்னதான் மார்டர்ன் உலகமாக இன்றைய உலகம் மாறிக்கொண்டிருந்தாலும், தண்ணீர் என்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் காணப்படுகிறது.

தண்ணீர் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் நோக்கில் உலக அமைப்புகள் ஒன்றிணைந்து 1992ஆம் ஆண்டு உலக தண்ணீர் தினத்தை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி ‘உலக தண்ணீர் தினம்’ ஒவ்வொரு தலைப்பின் கீழ் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி மக்கள் விழிப்படைந்தார்களா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. இன்று உலக தண்ணீர் தினத்தன்று நாம் செய்ய கூடிய ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், தண்ணீரை வீணாக செலவழிக்காமல், சேர்த்து வைப்போம் என உறுதி கொள்வது தான். இந்த காலத்தில் நமக்கென்ன என்று இருப்போமானால் அடுத்து வரும் நம் சந்ததிகளுக்கு தண்ணீர் என்பது கிடைக்கவே கூடாத ஒரு பொக்கிஷமாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here