உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணியின் நிலை என்ன? முழு விவரம் உள்ளே!!

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணியின் நிலை என்ன? முழு விவரம் உள்ளே!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணியின் நிலை என்ன? முழு விவரம் உள்ளே!!

ஆஸ்திரேலியா அணியானது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்ஸில் 475 ரன்களை குவித்திருந்தது. இந்த இலக்கை துரத்த களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 255 ரன்களுக்குள் சுருண்டது. இதன் விளைவால், 220 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸில் மீண்டும் தென் ஆப்பிரிக்காவை விளையாட அழைத்தது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி, 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டியானது டிரா செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுத்தது.

இதனால், ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற வெற்றி கணக்கில் தொடரை கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 75.56 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த பட்டியலில், இந்திய அணி 58.93 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 (or) 3-1 (or) 3-0 என்ற கணக்கில் வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், இந்த இரு அணிகளும் மோதுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here