உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்த 3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா??

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்த 3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா??
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்த 3 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா??

ஜூன் மாதம் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இந்த 3 வீரர்கள் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி முதல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியானது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த, இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்து, கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால், எதிர்வரும் 2வது சீசனுக்கான உலக கோப்பையில், இந்திய அணி தரமான வீரர்களை தேர்வு செய்து கோப்பையை வெல்ல முயற்சிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விளையாடப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 3 சுழற்பந்து மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி அசத்தி இருந்தது. ஆனால், இந்த கூட்டணி இங்கிலாந்தில் எடுபடுமா என்பது சந்தேகம் தான்.

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர்: அடுத்த சீசனுக்கான இடம், அணிகள் மற்றும் குழுக்கள் அப்டேட்!!

இதனால், இறுதிப் போட்டிக்கான டெஸ்ட் அணியில், மேலும் சில வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தற்போது டி20 இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாகூருக்கு இடம் பெற கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இவர்களை தொடர்ந்து, சமீபகாலமாக பார்மின்றி தடுமாறும் கே எல் ராகுல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் பார்மை மீட்டெடுக்கும் பட்சத்தில் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here