உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – கொரோனா பாதுகாப்பு காரணமாக மைதானம் மாற்றம்!!

0

வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதி போட்டி நடைபெறும் மைதானம் தற்போது கொரோனா பாதுகாப்பு காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தி வருகிறது. அதன்படி இந்த போட்டிக்கு முதலாவதாக நியூஸிலாந்து அணி தேர்வாகியது. நியூஸிலாந்து அணியுடன் மோதுவதற்கு மற்றொரு அணி யார் என்பதில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வந்தது. காரணம் அதற்கு இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு வாய்ப்பு இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியது. மேலும் இந்த இறுதி போட்டி வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்தனர்.

“வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய மகளிர் கிரிக்கெட் அணி – வைரலாகும் வீடியோ!!

தற்போது கொரோனா பாதுகாப்பு காரணம் கருதி போட்டி நடைபெறவிருக்கும் மைதானம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள சௌதாம்ப்டனில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது. ஏனெனில் சௌதாம்ப்டனில் உள்ள மைதானத்தில் தங்கும் விடுதி வசதி உள்ளது. எனவே வீரர்களுக்கு அமைக்கும் கொரோனா வளையம் பாதுகாப்புக்கு இது எளிமையாக இருக்கும் என்று கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here