Saturday, May 15, 2021

இன்னும் தூங்கவில்லையா?? சீக்கிரம் போய் தூங்குங்க!! இன்று உலக தூக்கத்திற்கான தினம்!!

Must Read

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மனிதர்களுக்கு நிம்மதியையும், மன அமைதியையும் தருவது தூக்கம் மட்டும் தான். உயிர் வாழ்வதற்கு சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தூக்கமும் முக்கியம்.

தூக்கம்

இன்று மார்ச் 19ஆம் தேதி, உலக தூக்கத்திற்கான தினம். தூக்கம் என்றதும் பொதுவாக நம் நினைவுக்கு வரும் வார்த்தை சோம்பேறி. ஏனென்றால் சோம்பேறிகள் தான் தூங்கி கொண்டிருப்பார்கள் என்பது இன்றைய சமுதாயத்தின் பரவலான கருத்தாக உள்ளது. வேலை, பணம் என்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தூக்கம் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

இந்தியாவில் மேலும் 39,726 பேருக்கு கொரோனா – பீதியில் மக்கள்!!

ஓரு கூட்டம் மனிதர்கள் தூக்கம் தான் வாழ்க்கை என்று ஒருபுறம் தூங்கிக்கொண்டிருக்க, சிலரோ தூக்கம் இல்லையே என வருந்தி கொண்டிருக்கிறார்கள். தூக்கத்திற்கான ஆராய்ச்சிகளை பொறுத்தவரை ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என கூறுகிறது. இளம் வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டுமாம். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 9 முதல் 11 மணி நேரம் வரை தூக்கம் கட்டாயம். 7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 17 மணி நேர தூக்கம் அவசியம் என ஆய்வுகள் கூறுகிறது. சரியாக தூங்குபவர்களுக்கு மருந்தோ மாத்திரையோ தேவையில்லை. அவர்களது உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். சரியான தூக்கம் இருந்தால் துக்கத்தை கூட மறக்கலாம். ஆனால் தூங்கி கொண்டே இருந்தால் அதுவே பெரிய துக்கமாக மாறிவிடும். எனவே அளவாக தூங்கி வளமான ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -