உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியீடு – இந்தியாவின் இடம் என்ன??

0

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் முதலிடம் பிடித்துள்ளது. அது போல இந்திய தலைநகர் டெல்லி 48 வது இடத்தை பிடித்துள்ளது.

The Economist பத்திரிகை குழு உலகின் பாதுகாப்பான நகரங்களுக்கான ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் டோக்கியோ, சிங்கப்பூர், ஒசாகா ஆகிய நகரங்களை முந்தி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடத்தை பிடித்துள்ளது.

கோபன்ஹேகன் நகரம் 100க்கு 82.4 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே போல இந்தியாவின் டெல்லி 48 வது இடத்தையும், மும்பை 50 வது இடத்தையும் பிடித்துள்ளது. டொரோண்டோ, சிங்கப்பூர், சிட்னி ஆகிய நகரங்கள் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளன.

உலகின் முதல் 10 பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்:

  • கோபன்ஹேகன் (டென்மார்க்)
  • டொராண்டோ (கனடா)
  • சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
  • சிட்னி (ஆஸ்திரேலியா)
  • டோக்கியோ (ஜப்பான்)
  • ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து)
  • வில்லிங்டன் (நியூசிலாந்து)
  • ஹாங்காங் (சீனா)
  • மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)
  • ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here