வானம் சற்று மேக மூட்டத்துடன் காட்சியளிக்கும் – இன்று உலக வானிலை தினம்!!

0

இன்று பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும், சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என உலகத்தில் ஏற்படும் வானிலை மாற்றங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்பின் நாள் இன்று.

உலக வானிலை நாள்

இன்று மார்ச் 23, உலக வானிலை தினம். ஒவ்வொரு நாளுக்கும் உரிய வானிலை அறிக்கையை மக்கள் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் படி உருவாக்கப்பட்டது தான் உலக வானிலை அமைப்பு. பல்வேறு உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் 1950ஆம் ஆண்டு வானிலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளும் படி உலக வானிலை அமைப்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமை செயலகம் ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் அமைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வானிலையில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு, அதை மக்களுக்கு தெரியப்படுத்துவது தான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இன்று வானம் வறட்சியாக காணப்படும், இன்று லேசான மழை பெய்யும், இன்று பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என ஒவ்வொரு நாளின் வானிலை அறிக்கையை மக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்கு உலக வானிலை அமைப்பு ஏதுவாக உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் தான் வானிலை மாற்றங்களினால் உலகத்தின் பல பகுதிகளில் ஏற்படும் பேரிழப்புகளை முன் கூட்டியே அறிந்து கொண்டு அதை தவிர்க்க முடிகிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி அதாவது இன்று உலக வானிலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டின் உலக வானிலை நாள் ‘பெருங்கடல், தட்ப வெப்பநிலை, வானிலை இம்மூன்றையும் உலகத்துடன் ஒருங்கிணைப்போம்’ என்ற தலைப்பின் கீழ் கொண்டாடப்படவுள்ளது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here