உலகளவில் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியல்  –  பிரதமர் மோடி உடன் இணைந்த இரு இந்தியர்கள்!!

0

உலக அளவில் மிகுந்த  செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி உடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, சீரம் நிறுவன சிஇஒ அடார் பூனவல்லா இடம் பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் மிக பிரபலமான டைம் இதழ் உலகளவில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலில்  உலகத் தலைவர்கள், சிறந்த சிந்தனையாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிறந்த பிரபலங்கள், கலை மற்றும் புகழ்பெற்ற சில நபர்கள் இடம் பெறுவார்கள்.

இந்த வருடமும் அந்த இதழ் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, சீரம் நிறுவன சிஇஒ அடார் பூனவல்லா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் பிரதமர் மோடி பற்றி குறிப்பிடுகையில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற தேச தலைவர்களுக்கு பிறகு மோடி, இந்திய அரசியலில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் நபராக விளங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், பிரிட்டன் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன்,அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here