புகைப்பழக்கம் உள்ளவர்களா நீங்கள்?? உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!!

0

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா தாக்கத்தினால் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக புற்றுநோய், இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

புகைபிடித்தல் உயிரை கொல்லும்:

புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும் என அனைத்து திரைப்படங்களிலும் பதிவு செய்து விட்டு புகை பிடிப்பது போன்ற காட்சிகள் அமைவது வழக்கமாகி உள்ளது. இதனால் ஈர்க்கப்பட்ட ரசிகர்களும் புகை பிடிப்பது ஸ்டைல் என்று நினைத்து அதற்கு அடிமையாகி வருகின்றனர். சிகெரெட் அட்டையில் அச்சுறுத்தும் புகைப்படம் இருந்தாலும் விற்பனைக்கு பஞ்சம் ஏதும் இல்லை. இது போன்று புகைபிடிக்கும் இளைஞர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதித்தவர்கள் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு நேரடியாக நுரையீரல் தொடர்புடையது என்பதால் புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக புற்றுநோய், இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here