Saturday, April 20, 2024

” எந்தன் நண்பியே, நண்பியே ” – உலக நண்பர்கள் தினம்!!

Must Read

மனிதர்களால் தனியாக வாழ முடியும் ஆனால், தனிமையுடன் வாழ முடியாது. இதுவே வாழ்க்கையின் விசித்திரம். அதே போல் மனிதனால் நட்பு என்ற வரையறைக்குள் இல்லாமல் இருக்க முடியாது. அத்தகைய நட்பை கொண்டாடும் நாள் இன்று.

” பூமியை கட்டி இழுக்கும் நட்பு என்னும் நூல்:

மனிதர்கள், ஒரு சமூக பிராணி என்று சொன்னார், அரிஸ்டாட்டில். மனிதனால், மற்றவர்களிடம் பேசாமலோ, பழகமலோ என்று இருக்க முடியாது. மனிதன் மற்றவர்களிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறான்.

மும்மொழி கல்வி, 5ம் வகுப்பு வரை தாய்மொழிப் பாடம் – புதிய கல்வி கொள்கை விபரங்கள்!!

இன்று நாம் நவநாகரிக உலகில் வாழலாம், பல மாற்றங்கள் வந்து இருக்கலாம், உறவுகளுக்குள் கொடுக்கப்படும் முக்கியத்துவங்கள் மாறி இருக்கலாம், ஆனால், மாறாதது என்று ஒன்று உண்டு என்றால் அது நட்பு மட்டும் தான். என்றுமே நமக்கு வழித்துணையாய், வாழ்வின் துணையாய் வருவது ” நட்பு”. திருவள்ளுவர் முதல் இன்றைய நவீன கவிஞர்கள் வரை யாரும் நட்பை பற்றி பாடல் எழுதாமல் இல்லை. இப்படி பட்ட நட்பை கொண்டாட ஒரு தினம், அது இன்று.

world friendship day
world friendship day

“மனித ஒற்றுமையின் பகிரப்பட்ட உணர்வு”

மனிதர்களால் அனைவர்க்கும் பகிரப்படும் உணர்வு, நட்பு. இப்படியாக நீக்கமற நிறைந்து இருக்கும் நட்புக்கு பெருமையையும், கொண்டடாட்டம் நிறைந்ததாக மாற்றும் ஒன்றாக உலக ஐக்கிய நாடுகள் சபை 2011 ஆம் ஆண்டு “உலக நண்பர்கள் தினம்” என்று ஒன்றை உருவாக்கியது. மனிதர்களுக்கு மத்தியில், நல்ல போக்கினை வளர்க்கவும், வன்முறைகளை குறைக்கவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

friends forever
friends forever

 

ஆனால், ஒவ்வொரு நாடுகளும் வேறு வேறு நாட்களில் இந்த தினத்தை கொண்டாடுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தில் தான் விடப்படும் ஆனால், இந்த வருடம் அனைவரும் ஜூலை மாதத்திலேயே கொண்டாட ஆரம்பித்து விட்டனர். நேபால், போன்ற மற்ற நாடுகளில் ஜூலை 30 ஆம் தேதி தான் கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தூத்துக்குடி to சென்னைக்கு Unreserved சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். நேற்று (ஏப்ரல் 19)...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -