பிரபல இளம் பாடகி திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்!!

0
உலகின் பெரும்பாலான இசை ரசிகர்களால் அறியப்பட்டவர், சாரா ஹார்டிங். இவர் புற்றுநோயால் இளம் வயதிலேயே பலியான சம்பவம் இவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்தே திரை உலக பிரபலங்கள் பலர் கொரோனவினால் உயிர் இழந்துள்ளனர். இது இந்திய சினிமாக்கள் தாண்டி உலகளாவிய சினிமாக்களுக்கு பொருந்தும். தற்போது ஹாலிவுட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.  அதாவது உலக புகழ் பெற்ற நடிகையும், மாடல் அழகியும், பாடகியுமான சாரா ஹார்டிங் இறந்துள்ளார்.
இவருக்கு வயது 39 தான். சிறு வயதிலேயே இவர் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டார். இவர் இதற்கு முன்பே தன் உடலின் மற்ற பகுதிகளுக்கும் கேன்சர் நோய் பரவி இருப்பதை உறுதிப்படுத்தினார். தற்போது இவர் மருத்துவமனையில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனிற்றி உயிர் இழந்துள்ளார். இதை அவரது அம்மா மேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரின் இறப்பு உலகெங்கும் இருக்கும் இவர் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறப்பிற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here