48 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா இந்தியா…, உலக கோப்பையை எதிர் நோக்கி ஓர் பயணம்!!

0
48 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா இந்தியா..., உலக கோப்பையை எதிர் நோக்கி ஓர் பயணம்!!
48 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா இந்தியா..., உலக கோப்பையை எதிர் நோக்கி ஓர் பயணம்!!

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரை, இந்திய அணி வென்று 48 ஆண்டு கால சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக கோப்பை ஹாக்கி:

இந்தியாவில் ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் வரும், 13ம் தேதி முதல் 16 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், பங்கு பெற உள்ள அணிகள் அனைத்தும் வரும் 5 தேதிக்குள் இந்தியாவிற்கு வந்தடைய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின் 13ம் தேதி முதல் தொடங்க உள்ள இந்த உலக கோப்பை தொடரில், லீக் சுற்றுகள் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, 2வது சுற்றுகள் ஜனவரி 22ம் தேதியும், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இதுவரை நடந்த உலக கோப்பை தொடர்களில் 4 முறை பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் தலா 3 முறையும், பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் இந்தியா தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

BCCI தலைவர் பதவியில் இருந்து வெளியேறிய கங்குலி.., மீண்டும் IPL போட்டியில் கால்பதிக்க உள்ளாரா??

இதில், அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை (1975) மட்டுமே பட்டத்தை வென்ற இந்திய அணி, தனது சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த உலக கோப்பையை வென்று வரலாறு படைக்கும் என ரசிகர் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்லும் பட்சத்தில், 48 ஆண்டுகால சாதனையை முறியடிக்க கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here