உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய அர்ஜென்டினா…, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபாரம்!!

0
உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய அர்ஜென்டினா..., தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபாரம்!!
உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய அர்ஜென்டினா..., தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபாரம்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தியது.

உலக கோப்பை ஹாக்கி:

சர்வதேச ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு இடையில், உலகக் கோப்பை தொடரானது இந்தியாவில் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 அணிகள் 4 குழுக்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணியானது குரூப் D யில் இணைந்துள்ளது.

என்ன ஹர்திக் பாண்டியா இப்படி செஞ்சுட்டீங்களே?? இவரது இந்த செயலை பிசிசிஐ கண்டிக்குமா??

இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில், குரூப் A யில் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா அணியானது தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியானது, இந்தியாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதல் பாதியில் 43 வது நிமிடத்தில், அர்ஜென்டினா அணியின் கேசெல்லா முதல் கோலை அடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், இரு அணிகளும் ஒரு கோலுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும், 2வது பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், அர்ஜென்டினா அணியானது 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அர்ஜென்டினா அணியானது இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here