உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியுடன் சாதனையை தொடங்கிய இந்தியா!!

0
உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியுடன் சாதனையை தொடங்கிய இந்தியா!!
உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியுடன் சாதனையை தொடங்கிய இந்தியா!!

உலக கோப்பை ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியா vs ஸ்பெயின்:

இந்தியாவில் ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடரில், குரூப் D யில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தியாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், இந்தியாவின் அமித் 12 வது நிமிடத்திலேயே கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து, 26 வது நிமிடத்தில் ஹர்திக் ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதிலேயே இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, தொடங்கப்பட்ட 2வது பாதியில் ஸ்பெயின் அணி கோல் அடிக்க பல முறை முயற்சித்த போது, தோல்வியிலேயே முடிந்தது. இதனால், இந்தியா அணி உலக கோப்பை தொடரின் முதல் போட்டியை, 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கோல் அடித்தன் மூலம், இதுவரை விளையாடிய 96 போட்டிகளில் 201 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here