இந்தியாவில் களைகட்டிய உலக கோப்பை திருவிழா…, நாளை முதல் போட்டிகள் கோலாகல ஆரம்பம் !!

0
இந்தியாவில் களைகட்டிய உலக கோப்பை திருவிழா..., நாளை முதல் போட்டிகள் கோலாகல ஆரம்பம் !!
இந்தியாவில் களைகட்டிய உலக கோப்பை திருவிழா..., நாளை முதல் போட்டிகள் கோலாகல ஆரம்பம் !!

நாளை முதல் உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி முதலில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

உலக கோப்பை ஹாக்கி:

இந்தியாவில் ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நாளை முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரானது, ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள கலிங்கா மற்றும் பிர்சா முண்டா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 அணிகள் பங்கு பெற உள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த 16 அணிகள் 4 குழுகளின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலில் லீக் சுற்றுகள் போல் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோத உள்ளன. இதன் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதனை தொடர்ந்து, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் 27 மற்றும் 29ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்திய அணியை பொறுத்த வரையில், தனது சொந்த மண்ணில் உலக கோப்பை தொடரை விளையாடுவது என்பது கூடுதல் பலமாக இருக்கும். இந்த தொடரில், இந்திய அணியானது, குழு Dயில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில், முதல் போட்டியாக ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நாளை ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்கான அறிமுக விழா நேற்று கோலாகலமாக இந்தியாவில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here