உலக கோப்பை ஹாக்கி.., காலிறுதியில் இந்தியா நுழைவதற்கான வழிகள் இது மட்டும் தான்…, முழு விவரம் உள்ளே!!

0
உலக கோப்பை ஹாக்கி.., காலிறுதியில் இந்தியா நுழைவதற்கான வழிகள் இது மட்டும் தான்..., முழு விவரம் உள்ளே!!
உலக கோப்பை ஹாக்கி.., காலிறுதியில் இந்தியா நுழைவதற்கான வழிகள் இது மட்டும் தான்..., முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடரானது, கடந்த 13ம் தேதி முதல் 16 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் D யில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில், ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, 2 வது போட்டியில் இங்கிலாந்து அணியை (0-0) சமன் செய்தது. இதன் மூலம், குரூப் D பட்டியலில், இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பட்டியலில், இங்கிலாந்து அணி (4) முதலிடத்திலும், ஸ்பெயின் (3) மற்றும் வேல்ஸ் (0) 3 வது மற்றும் 4வது இடத்திலும் உள்ளன. இதில், லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும். எனவே, தற்போது 2வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, வரும் 19ம் தேதி வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை வென்று அதிக புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கேள்வி குறியாகி வரும் ரோஹித் சர்மா பார்ம்…, அறிவுரை வழங்கிய இந்திய தொடக்க வீரர்!!

இதே போல, இந்த உலக கோப்பை தொடரில் இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத வேல்ஸ் அணி, இந்தியாவுக்கு எதிரான போட்டியை வென்று ஆறுதல் வெற்றியாவது பெற அதிக அளவில் முயற்சிக்கும். இதனால், நாளை மறுநாள் நடைபெற இருக்கும் போட்டியானது இரு அணிக்கும் மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை, இந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும் கூட, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இங்கிலாந்து வென்றாலும் இந்திய அணி காலிறுதிக்கு புள்ளி அடிப்படையில் தகுதி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here