நியூசிலாந்திடம் பணிந்த இந்தியா…, உலக கோப்பையில் இருந்து வெளியேறி பலத்த ஏமாற்றம்!!

0
நியூசிலாந்திடம் பணிந்த இந்தியா..., உலக கோப்பையில் இருந்து வெளியேறி பலத்த ஏமாற்றம்!!
நியூசிலாந்திடம் பணிந்த இந்தியா..., உலக கோப்பையில் இருந்து வெளியேறி பலத்த ஏமாற்றம்!!

உலக கோப்பை ஹாக்கி தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து, காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து உள்ளது.

உலக கோப்பை ஹாக்கி:

ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடரின் 15 வது சீசன் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்குபெற்றுள்ள இந்த தொடரில், இந்திய அணி குரூப் D யில், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தனது லீக் சுற்றை முடித்தது. இதில், இந்திய அணி 2ல் வெற்றி 1ல் டிரா செய்து 2வது இடத்தை பிடித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், நேரடியாக காலிறுதிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக, இந்திய அணி வெற்றி பெற்றால், காலிறுதிக்கு முன்னேறி விடலாம் என்று இருந்தது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணியின் வீரர்கள் லலித், சுக்ஜீத் சிங் மற்றும் வருண் குமார் ஆகியோர், 18வது, 25 வது மற்றும் 41 வது நிமிடங்களில் தலா ஒரு கோல்கள் அடித்தனர்.

U19 வேர்ல்ட் கப்: இலங்கையை வீழ்த்திய இந்தியா…, அரையிறுதிக்கு தகுதி பெற்றதா?? முழு விவரம் உள்ளே!!

இதற்கிடையில், நியூசிலாந்து அணி வீரர்களும், 29வது ,44வது மற்றும் 50 வது நிமிடங்களில் 3 கோல்கள் அடிக்க, போட்டியானது, 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் போட்டியானது, பெனால்டி ஷுட்டை நோக்கி நகர்ந்தது. இதில், 4-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் விளைவாக, காலிறுதிக்கு முன்னேற தவறியதோடு, உலக கோப்பையிலிருந்தும் இந்திய அணி வெளியேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here